2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்ததாகத் தெரிவிக்கப்படும் 11 பேர் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது நிலத்திற்கடியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த 100 லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .