2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

நன்னீர் மின்பிடிப்பாளர்களுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஜூன் 18 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடல்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சு சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை வழங்கியுள்ளது.

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் ஊடாக இந்த உபகரணங்கள் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் பொன்னம்பலம் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் ஜோர்ஜ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சின் இணைப்புச் செயலாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 22 நன்னீர் மீனவ கிராமிய அமைப்புக்களுக்கு 20 தோனிகளும் 100 வலைகளும் வழக்கப்பட்டன.

இப்பொருட்கள் நன்னீர் பிடியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பேருதவியாக இருக்கும் என தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் பொன்னம்பலம் பிரபாகரன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .