2026 மே 09, சனிக்கிழமை

dd

கிழக்கு மாகாணத்தில் தொழில்நுட்பப் பிரிவு கற்கைநெறிக்கு 16 பாடசாலைகள் தெரிவு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 30 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கல்வி அமைச்சால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவிற்கான தொழில்நுட்பப் பிரிவு கற்கைநெறிக்காக கிழக்கு மாகாணத்திலிருந்து 16 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிசாம் தெரிவித்தார்.

இவற்றில் 8 தேசிய பாடசாலைகள் அடங்குகின்றன. ஏனைய பாடசாலைகள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவைக் கொண்ட  பாடசாலைகள் எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் தலா ஒவ்வொரு பாடசாலைகள் இந்தத் துறையில் கற்பதற்கு என கல்வி அமைச்சால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கு உரிய தொழில்நுட்பப் பிரிவு கொண்ட பாடசாலையாக காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .