2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி வேலைகளுக்காக 200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு : எஸ்.எச்.முசம்மில்

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாண்டு அபிவிருத்தி வேலைகளுக்காக 200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

மேலும், 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ்' 31 திட்டங்களுக்காக 18 மில்லியன் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டில் இருந்து 38 திட்டங்களுக்காக 2.14 மில்லியன் ரூபாவும், விசேட திட்டத்தின் கீழ், 15திட்டத்திற்காக 25.50 மில்லியன் ரூபாவும், கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் 110 திட்டத்திற்காக 142.47 மில்லியன் ரூபாவும், வாழ்வின் எழுச்சி திட்டத்திற்காக 3.45மில்லியன் ரூபாவும், மாகாண சபை நிதியொதுக்கீட்டிலிருந்து 14 திட்டங்களுக்காக 10.40 மில்லியன் ரூபாவும், மத்திய அரசின் பொது நிருவாக அமைச்சிலிருந்து ஒரு திட்டத்திற்காக 5 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் முசம்மில் மேலும் தெரிவித்தார்.

மொத்தமாக 211 திட்டங்களுக்காக இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X