2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி திட்டங்களுக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்துக்குள், இவ்வண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்தும் முடிக்கப்படல் வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (05) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது, அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இவ்வாண்டு சுமார் 2000 மில்லியன் ரூபாய் நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் அக்டோபர் மாதத்தற்குள் வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு அதற்கான நிதியினையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பாக, எமது அமைச்சின் செயலாளர் அண்மையில் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்கள் அனைவரையும் அழைத்து இது தொடர்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், இந்நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டத்திற்காக பெருந்தொகையான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியினை சரியாக பயன்படுத்தி குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எக்காரணம் கொண்டும் அடுத்த ஆண்டு வழங்கப்படமாட்டாது.

எனவே, இந்த வருட நிதியினை இவ்வருடமே செலவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி இன்னும் செலவு செய்யப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக குறித்த திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X