2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மரப்பாலம் ராஜபுரம் கிராம மக்கள் 200 பேர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

Thipaan   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர்ப்; பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மரப்பாலம் மற்றும் ராஜபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர், இன்று சனிக்கிழமை (13) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.

கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மரப்பாலம் மற்றும் ராஜபுரம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமைக்காக கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அங்கு உரையாற்றிய கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபால,

முதலில் கிராம மக்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு தங்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை அடைந்து கொள்ள வேண்டும்.
இந்திய வீட்டுத் திட்டம் கருணா அம்மானின் முழு முயற்சியால் கிழக்கு மாகாண மக்களுக்கும் கொண்டு வரப்பட்டது.

வீட்டுத் திட்டத்தில் நன்மையடைந்த மக்கள் ஒரு போதும் இந்த வீட்டுத் திட்டம் யாரால் கிடைக்கப் பெற்றது என்பதை மறக்கக் கூடாது.
அரசாங்கத்தின் பல்வேறு நன்மைகளை அனுபவிக்கும் மக்கள், கடைசியில் தேர்தல் வரும் பொழுது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கின்ற ஒரு மனோபாவம் உள்ளது.

காலங்காலமாக இதனையே செய்து பழக்கப்பட்டு விட்டு எதிர்ப்பு அரசியலால் நாம் பெற்றுக் கொண்ட நன்மைகள் ஏதுமில்லை. எனவே, இதுபற்றி தமிழ் மக்கள் நின்று நிதானித்துச் செயற்பட வேண்டும்.

1983 ஜுலைக் கலவரத்தில் மலையகத்திலிருந்து பாதிக்கப்பட்டு வந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் மரப்பாலத்தில் குடியமர்ந்த மக்கள் தொடர்ந்து இப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினால் யுத்தம் முடிவடையும் வரையும் இழப்புக்களையே சந்தித்துள்ளனர்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தையும் மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பெற்றுத் தந்தார்.

அவ்வாறு கிடைத்த நன்மையையும் எமது ஒற்றுமையின்மை காரணமாக இழந்து விடக் கூடாது. பிரதேசத்து மக்கள் அரசுக்கு தமது ஆதரவை வழங்கினால் எதிர்காலத்தில் இந்தக் கிராமங்களில் உள்ள பல குறைகளை நீக்கி பதுளை வீதியிலுள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியும் என அவர் கூறினார்.

இந்திய வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டதில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மரப்பாலம் மற்றும் ராஜபுர கிராம மக்கள் இதன்போது சுட்டிக் காட்டினர்.

இந்நிகழ்வில் கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய கிளைச் செயலாளர் ஐ. லலீந்திரன், வந்தாறுமூலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிளைத் தலைவர் வி. நந்தகுமார், மரப்பாலம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்  ரீ. செல்லத்துரை, உப தலைவர் ஆர். ஞானப்பிரகாசம், விவசாய சம்மேளனத் தலைவர் கே. வேலாயுதம், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X