2025 மே 02, வெள்ளிக்கிழமை

மைக்கலைற் கிராண்ட் எக்ஸ்போ-2014 கண்காட்சி

Kanagaraj   / 2014 மே 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


140 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மைக்கலைற் கிராண்ட் எக்ஸ்போ-2014 கண்காட்சி நிகழ்வுகள்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்காவினால் வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இக் கண்காட்சி  இன்று வெள்ளிக்கிழமையும் நடைபெறும்.

முதல்நாள் நிகழ்வில், அதிதியாக  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் மற்றும்   மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.கோவிந்தராஜா, போல் சற்குணநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையாக  தரமுயர்த்தப்பட்டு 20 வருடங்கள் நிறைவையும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 140 வருட பூர்த்தியையும் சிறப்பிக்கும் முகமாக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் திருமதி சி.எஸ்.மாசிலாமணி தெரிவித்தார்.

அதேநேரம், ஒவ்வொரு பாடத்துறைக்கும் காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வங்கிகள், மீன்பிடித் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களின் காட்சிக் கூடங்களும் நிறுவப்படவுள்ளன. மொத்தமாக 80 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் இணைந்து முழுமையான ஏற்பாடுகளை செய்ததாக  பிரதி அதிபரும் கண்காட்சி இணைப்பாளருமான இரத்தினசிங்கம் பெஸ்லியோவான் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .