Super User / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் புதிய கட்டடத்தினை திறந்து வைப்பதோடு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற கமநெகும திட்டம் 2012 இல் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை என்கின்ற நிகழ்ச்சி திட்டத்தையும் அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
32 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago