Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபைப் பிரிவில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நுளம்புப்பெருக்கத்தை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஓட்டமாவடி பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த வாரம் வரையிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி 254 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.; இவர்களில் 05 பேர் மரணமடைந்துள்ளனர். ஓட்டமாவடி பிரதேசசபை எல்லைக்குள் 54 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில்; பொலிஸார், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேசசபை சமூகசேவை அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பிரதேசத்தின் அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகியவற்றின்; சுகாதார வைத்திய அதிகாரி எம்.அர்ச்சுதன், சுகாதார பரிசோதகர்கள், ஓட்டமாவடி பிரதேசசபையின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பொலிஸார், பள்ளிவாசல் தலைவர்கள், பொதுஅமைப்புக்களின் தலைவர்கள்; கலந்து கொண்டனர்.
.jpg)
19 minute ago
26 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
39 minute ago
48 minute ago