2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

2,872 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 21 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள  45  கிராம அலுவலகர்  பிரிவுகளில்  2,872  குடும்பங்கள் நிரந்தர  வீடுகள்  இன்றி உள்ளதாக அப்பிரதேச  செயலாளர்  எஸ்.கோபாலரத்தினம்   தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் 5,257  குடும்பங்கள்   மலசலகூட வசதியின்றியும்  6,900  குடும்பங்கள்  குடிநீப்ர்   வசதியின்றியும் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.

மாங்காடு, தேத்தாத்தீவு, களுதாவளை, களுவாஞ்சிக்குடி, குருமண்வெளி, கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், மகிழுர் போன்ற  கிராமங்களில்  அதிகளவானோர் நிரந்தர வீடுகள் இன்றி உள்ளனர்.

மேலும் மாங்காடு, தேத்தாத்தீவு, களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சிமடம் போன்ற  கிராமங்களில் அதிகளவானோர்   மலசலகூட  வசதியின்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X