2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 3 உணவக உரிமையாளர்களுக்கு தண்டம் விதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 25 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருள்களை வைத்திருந்தமைக்காக மட்டக்களப்பு நகரிலுள்ள 3 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தலா 6,000 ரூபா அபராதம் நேற்று விதிக்கப்பட்டன.

நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி புஸ்பகுமார தலைமையிலான குழுவினரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மணிமாறனும் இணைந்து இவ் உணவகங்களில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது இவ் உணவகங்கள் அடையாளம் காணப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருள்களுடன்; மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவ் உணவகங்களின் உரிமையாளர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மக்களின் நுகர்வுக்குதவாத உணவுப் பதார்த்தங்களை வைத்திருந்தமைக்காக நீதவான் அப்துல்லா ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம்  விதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .