2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பகிடிவதையால் மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.பாக்கியநாதன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட  முதலாம் வருட  மாணவர்கள் மூவர் மோசமான பகிடிவதைக்கு  உள்ளான நிலையில்,  உடல் நிலை பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (3) மாலை  அனுமதிக்கப்பட்டதாக காத்தான்குடி  பொலிஸார் தெரிவித்தனர்.

கூழாவடியைச் சேர்ந்த ஆர்.தனஞ்செயன் (வயது 20), மாமாங்கத்தைச் சேர்ந்த ஆர்.விஜிகரன் (வயது 22), புன்னைச்சோலையைச் சேர்ந்த சி.சபேஸ்கரன் (வயது 21) ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வந்தாறுமூலையிலிருந்து கல்லடிக்கு புதன்கிழமை (3) காலை தங்களை அழைத்துச்சென்ற கலைப்பிரிவின் இரண்டாம் வருட மாணவர்கள் 8 பேர், பகிடிவதை என்ற பெயரில் கல்லடியிலுள்ள தனியார் வீடொன்றில்  தங்களை முழுநாளும் சித்திரவதை செய்ததாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களிடமிருந்து பலவந்தமாக மதுபானத்துக்கு பணம் அபகரித்து மதுபானம்  வாங்கி குடித்து கும்மாளமடித்தனர். அத்துடன்,  தங்களுக்கும் மதுபானம் பருக்கியதுடன்,  கடுமையாக தங்களை  தாக்கியதாகவும் இந்த மாணவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X