2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வின் எழுச்சி 6ஆம் கட்ட அமுலாக்க கூட்டம்

Super User   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஏ.எச்.ஏ.ஹுஸைன்


திவி நெகும வாழ்வெழுச்சித் திட்டத்தின் 6ஆம் கட்டத்தை அமுலாக்குதல் சம்பந்மான கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் வெள்ளிக்கிழமை (29) பிரேதச செயலக சபா மண்டபத்தில் நடந்தது.

இக்கலந்துரையாடலில் விவசாய, கால் நடை, மீன்பிடி, கிராமிய கைத்தொழில் உள்ளிட்ட பல வாழ்வாதாரத் திட்டங்களினூடாக 'வாழ்வின் எழுச்சி' திட்டத்தின் 6ஆம் கட்டத்தை எவ்வாறு வெற்றி கரமாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

விவசாயத் திணைக்களத்தின் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன், மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட், அரச கால் நடை வைத்தியர் எம்.ஏ.ரஸீன், பெரும்பாக உத்தியோகத்தர் பதூர்தீன், மரமுந்திகை அபிவிருத்தி அலுவலர் ஜி.மலைமகள் உட்பட இன்னும் பல அரச, கூட்டுத்தாபன, திணைக்களங்களின் உயரதிகாரிகளும் பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூர்த்தி திட்ட அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X