2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 60 சதவீதமானோருக்கு நீரிழிவு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 சதவீதமானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது.  இதற்கு காரணம் இரசாயனப் பதார்த்தங்களிலான உணவுகளை  உட்கொள்வதேயென மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

உள்ளுர் கைத்தறிப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி மட்டக்களப்பு அமிர்தகழி மாமங்கேஸ்வரர் கோவில் முன்றலில் நேற்று சனிக்கிழமை (19) ஆரம்பமானது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 6ப்0 சதவீதமானோருக்கு நீரிழிவு நோய் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கு காணரம் இரசாயனப் பதார்த்தங்களிலான உணவுகளை  உட்கொள்வதேயாகும்.  எமது பழைய காலத்து உணவு பழக்கவழக்கம் எம்மிடையே மறைந்து விட்டது. இயற்கையான எமது உற்பத்திகளை நாம் உண்பதற்கு தவறிவிட்டோம்.

இரசாயனம் கலந்த உணவுகளையே நாம் உட்கொள்கின்றோம். இதனால், நாம் பல்வேறு தொற்றா நோய்களுக்கு ஆளாக வேண்டி நேரிடுகின்றது.
எமது பாரம்பரிய உணவு முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். எமது தாய், தந்தையர்கள் எமக்கு எமது வீட்டிலேயே இரசாயனமற்ற மரக்கறிகளை உற்பத்தி செய்து எமக்கு தந்தார்கள்.

ஆனால், இன்று எம்மிடையே அந்த பழக்கம் இல்லை. மட்டக்களப்புக்கு வெளியிலிருந்து வரும் மரக்கறிகள் மற்றும் உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகின்றோம். எமது உற்பத்தியில் நாம் தங்கியிருக்காமல், வேறு பிரதேசங்களில் இருந்துவரும் உற்பத்திப் பொருட்களையே நாடுகின்றோம்

அந்த வகையில், இந்த உள்ளூர் கைத்தறிப் பொருட்களைக் கொண்டு பல்வேறு கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். நாம் கழிவாக வீசுகின்ற பிளாஸடிக் போத்தல்களைப் பயன்படுத்தி இங்கு சில உற்பத்திப் பொருட்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எதிர்காலத்தில் எமது உற்பத்திக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த சுகதேகிகளாக வாழமுடியும்' என்றார்.  

இதேவேளை மட்டக்களப்பு உள்ளூர் அறிவுத்திறன் முன்னெடுப்புக்களுக்கான மூன்றாவது கண் நண்பர்கள் வட்டத்தின் முக்கியஸ்தரான  ஜெ.கமலா வாசுகி இங்கு உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணத்தின் தமிழர் கலாசாரப் பாராம்பரியம் இன்று தொலைந்துவிட்டது. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் நாகரிகத்துக்கு எமது தமிழர் சமூகம் அடிமையாகி விட்டது. இதனால், எமது உற்பத்திகள் மறைந்து போய்விட்டன.

தமிழர் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் மட்டக்களப்பிலிருந்து மறைந்து விட்டன. எமது தமிழர் கலாசாரத்தையும்; பண்பாட்டையும்  பாரம்பரியத்தையும் நாம் வளர்க்க வேண்டும். ஒரு காலத்தில் மட்டக்களப்பு கைத்தறி சாரம் என்றால் அதற்கு பெரிய மகுசு இருந்தது. அதேபோன்று, மட்டக்களப்பு பன் புல் பாய் என்றால் அதற்கும் கிராக்கி இருந்தது.

இன்று இந்தியாவின் உடுதுணிகளிலேயே நாம் நாட்டம் கொள்கின்றோம். நாம் எமது உள்ளூர் கைத்தறிகளை ஊக்கப்படுத்தி அதன் உற்பத்திகளை நமது பிரதேச மக்கள் பயன்படுத்த வேண்டும்' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X