2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி வீட்டு சீட்டிழுப்பு திட்டத்தில் 65 பயனாளிகள் தெரிவு

Kogilavani   / 2012 ஜூலை 24 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வீட்டு சீட்டிழுப்பு திட்டத்தில் 65 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

கடந்த 2011 ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குட்பட்ட வகையில் இந்த வீட்டு சீட்டிழுப்பு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 65 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகளும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகளும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகளும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 2வீடுகளும், ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவில் 7வீடுகளும், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும், வெல்லாவெளி பிரதேசத்தில் 5 வீடுகளும், வாகரை பிரதேசத்தில் 2 வீடுகளும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 12 விடுகளும், வாழைச்சேனை பிரதேசத்தில் 2 வீடுகளும், காத்தான்குடி பிரதேசத்தில் 5 வீடுகளும், செங்கலடி பிரதேசத்தில் 5 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 150,000 (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா) வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் குணரட்னம் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .