2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திகளுக்கு ரூ.70,883 மில்லியன் செலவு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏழு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக 70,883 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரைக்கும்  இந்த நிதியில்;   மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மாவட்டத்திலுள்ள பாலங்கள், வீதிகள், விவசாயம், வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, குடிநீர், மின்சாரம், சுற்றுலாத்துறை மற்றும் பொதுநிர்வாகம், வாழ்வாதாரம் ஆகியவற்றில் அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளன.

48 சதவீதமான நிதி வீதி நிர்மாணம், வீதி புனரமைப்பு, பாலங்கள் நிர்மாணம் ஆகியவற்றுக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X