2025 மே 01, வியாழக்கிழமை

யானை தாக்கியதில் 8 பிள்ளைகளின் தந்தை மரணம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்,ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தினைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி மரணமடைந்துள்ளார்.

தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தினைச் சேர்ந்த 45 வயதுடைய செல்வநாயகம்-இராசநாயகம் என்ற 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இவர் கச்சக்கொடி சுவாமி மலை எனும் பிரதேசத்திற்கு விறகு சேகரிப்பதற்குநேற்றுக்காலை சென்றுள்ளார். வீதியினால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது இவரை காட்டு யானை தாக்கியுள்ளது.

இவருடன் விறகு சேகரிப்பதற்கு சென்ற ஏனைய இருவரும் தப்பித்துவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .