2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சின்னவத்தைப்பகுதியில் மினி சூறாவளி: 9 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தைப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சுழல் காற்று காரணமாக 9 வீடுகள் தேமடைந்துள்ளன.

இந்த காற்றினால் ஆலயம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. ஏழு வீடுகள் கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் இரு வீடுகள் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றன.

சின்னவத்தை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள பின்தங்கிய கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X