2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 9,000 ஏக்கரிலேயே மரமுந்திரிகைச் செய்கை

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 02 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தில 45,000 ஏக்கரில்  மரமுந்திரிகை செய்கை பண்ணக்கூடியதாக  உள்ளது. ஆனால், இதுவரையில் 9,000 ஏக்கரிலேயே மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளதாக மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பா.சசிகரன் தெரிவித்தார்.

எஞ்சிய 36,000 ஏக்கர்  மரமுந்திரிகை செய்கை பண்ணப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பில்  ஞாயிற்றுக்கிழமை (02) கேட்டபோதே அவர் இதனைக் கூறினார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 3 வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலமாக மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகளை  பொதுமக்கள் பெறமுடியும் எனவும் அவர் கூறினார்.

அரை ஏக்கரிலிருந்து 10 ஏக்கர்வரை மரமுந்திரிகை செய்கை பண்ணுவதற்கு தாம் உதவவுள்ளதாகவும்  பொதுமக்கள் எவ்வேளை நாடுகின்றபோதும் வேண்டிய உதவிகளையும் ஆலோசனைகளையும் மேற்கொள்வதற்கு மரமுந்;திரிகை கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயம் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.  இந்நிலையில் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தால் மரமுந்திரிகைக்கன்றுகள், தேவையான ஆலோசனைகள், பசளைகள் மற்றும் கொடுப்பனவுகள்; மானியமாக வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

இவற்றைப் பெற்று உரிய பலன் அடைய இம்மாவட்ட மக்கள் முன்வர வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மரமுந்திரிகைச் செயற்பாட்டியில் வெற்றி எட்டமுடியுமென்பதுடன், இவை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமையுமெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X