2021 ஜூலை 31, சனிக்கிழமை

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின் மட்டக்களப்பில் 95பேரை காணவில்லை - பொன்.செல்வராசா

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (அ.அனுருத்தன்)

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பெண்கள் உட்பட சுமார் 95பேர் காணாமல் போயுள்ளனர் என்று அவர்களின் குடும்பத்தினர் தன்னிடம் முறையிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே குறிப்பிட்ட நபர்கள் காணாமல் போன சம்பவங்களும் இடம்பெற்றதாக செல்வராசா எம்.பி.கூறினார்.

அவரது தகவலின்படி, 2007ஆம் ஆண்டில் மாத்திரம் 34பேர் காணாமல் போயுள்ளார்கள். இந்த எண்ணிக்கையில் சுமார் 15பேர் 2007ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதி கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளனர்.

2008ஆம் ஆண்டில் 35பேரும் 2009ஆம் ஆண்டில் 45பேரும் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்கள் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எம்.பி, ஜனாதிபதிக்கும் தமது கட்சிக்கும் இடையில் எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் சந்திப்புக்களின் போது இது குறித்து அவரது கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .