Princiya Dixci / 2021 மார்ச் 02 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகரை அழகுபடுத்தல் 10 சிரமதான வேலைத்திட்டம், அந்நகர சபைத் தலைவரால் இன்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 10ஆம் திகதி வரை இந்த ஒருங்கிணைந்த சிரமதான தூய்மையாக்கல் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார்.
நகரை அழகுபடுத்தி, பசுமையான நகராக மாற்றும் இந்த வேலைத் திட்டம், வட்டார அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊர் தழுவிய இந்த சிரமதான வேலைத்திட்டம், சமூகநல அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன், ஏறாவூர் நகரசபையினதும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் வாகன ஒத்தாசையுடனும் இடம்பெற்று வருவதாக நகர சபைச் செயலாளர் எம்.ஆர் சியாஹுல்ஹக் தெரிவித்தார்.
இந்த வேலைத் திட்டத்துக்குப் பொதுமக்கள், வர்த்தகர்கள், ஏனைய திணைக்களக் கூட்டுத்தாபன அலுவலர்களினதும் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
11 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
2 hours ago