Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன், வ.துசாந்தன்
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், 10,008 அபூர்வ காயகல்ப மூலிகைகளைக் கொண்டு, ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ மாபெரும் வேள்வி, நாளை (17) நாளை மறுதினம் (18) இந்திய சித்தர்களால் நடத்தப்படவுள்ளது.
உலக சுபீட்சத்துக்காகவும் இலங்கைவாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும், நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காகவும், இலங்கையில் மிகப் பெரிய தெய்வீக அருளாட்சி மலர்ந்து, அனைவரும் சபீட்சம் பெறும் நோக்கங்களுடன், இந்த மாபெரும் வேள்வி நடத்தப்படவுள்ளது.
இந்தியாவின் கொல்லிமலை சித்தர் மஹா பைரவ உபாசகர் காகபுகண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையிலுள்ள, மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகள், சித்தமுறைப்படி, இவ்வேள்வியை நடத்தவுள்ளனர்.
நாளை காலை 8 மணிக்கு, மஹா கணபதி ஹோமமும். மாலை 6 மணிக்கு, ஸ்ரீ நவக்கிரக ஹேமமும், மறுநாள் 18ஆம் திகதி காலை, ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வியும் ஆரம்பமாகும்.
வேள்வி இடம்பெறவிருக்கும் திகதிகளில் அன்னதானங்களும் வழங்கப்படவுள்ளன. இதற்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஆலய அன்னதான சபையினரைத் தொடர்புகொண்டு வழங்கமுடியுமென, ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
24 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
57 minute ago
1 hours ago