Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 2.5 மில்லியன் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை திங்கட்கிழமை (29) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய இக்கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கஜ முத்துக்களை வியாபாரம் செய்வதற்காக எடுத்து வந்த நிலைலயில் கைது செய்ததுடன் வியாபாரத்துக்காக எடுத்து வந்த சட்ட விரோதமான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களை மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Apr 2025
30 Apr 2025