2026 மே 09, சனிக்கிழமை

13 ஐ பலவீனப்படுத்தும் முயற்சியை ஏற்க மாட்டோம்: சந்திரகாந்தன்

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வடிவேல்-சக்திவேல்

'13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன் முதலில் கிழக்கில் நிர்வகித்தவன் என்ற அடிப்படையிலும் அதேவேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும்; ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது' என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லையில் நிர்மாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டபத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இக்கட்டிடமானது சுமார் 180 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அரசுடன் ஓர் பங்காளி கட்சியாக நாம் இணைந்திருந்தாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்க மாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில் எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம்.

அதேவேளை தென்னிலங்கையிலிருந்துகொண்டு இனவாத விசத்தை கக்குகின்றவர்களுக்கு எதிராகவும் எமது சிறுபான்மை மக்களது அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகின்ற உண்மையான உள்ளங்கொண்ட அரசியல் தலைவர்களுடன் இணைந்து கரம் கோர்த்து செயற்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்றுமே தயாராக இருக்கின்றது' என்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .