Kogilavani / 2012 மார்ச் 05 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 1500 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
கண்டி சியம்மநாயக்க மல்வத்தை பீடத்தின் அநுநாயக்கர்களின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் ஏற்பாட்டில் அட்லஸ் நிறுவனத்தினால் இப் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் சியம்மநாயக்கா மல்வத்தை விகாரையின் பீடாதிபதி அநுநாயக்க திவல்கும்புற விமல தர்ம தேரர் மற்றும் அதன் சங்க நாயக்கர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 1500 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
9 hours ago
9 hours ago
neethan Monday, 05 March 2012 03:56 PM
புலம் பெயர்ந்து வளமாக வாழும் நம்மவர், இவ்வாறன உதவிகளை யுத்த பாதிப்பினால் அல்லலுற்று வாழும் மாணவ சமுகத்திக்கு செய்யமாட்டார்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago