2025 மே 02, வெள்ளிக்கிழமை

1712 காணிகளின் வெற்று அனுமதிப்பத்திரங்கள் கைப்பற்றல்

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படமால் காணப்பட்ட 1712 காணிகளின் வெற்று அனுமதிப்பத்திரங்களை மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் வியாழக்கிழமை கைப்பற்றியதாக மட்டக்களப்பு காணி அதிகாரி குகதா ஈஸ்வரன் தெரிவித்தார்.

இப்பிரதேச செயலகத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த மாகாண காணி ஆணையாளர், மற்றும் உதவிக் காணி ஆணையாளர் ரவிராஜன் தலைமையிலான அதிகாரிகள் இப்பத்திரங்களை கைப்பற்றியதுடன் எழுதிய நிலையில் இருந்த எல்.சி105 எனும் பெயர் பட்டியலையும் கைப்பற்றி மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்துக்கு எடுத்துச் சென்றிருப்பதாக அவர் மேலம் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .