2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிக்குடியில் 2 கடைகள் உடைப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 02 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின்; களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை இரண்டு கடைகள் ஒரேநேரத்தில் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தேநீர் மற்றும் பலசரக்கு கடைகளே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி இரண்டு  கடைகளிலும் ஒட்டப்பட்டிருந்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்டிகளை,  இனந்தெரியாத நபர்கள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை; கிழித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றிருந்தனர். பின்னர், மீண்டும் அக்கடைகளில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்கள் நேற்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டன.  இதனைத் தொடர்ந்து,  கடை உடைப்பு சம்பவங்கள்; இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

தனது கடையை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாக தேநீர்க்கடை உரிமையாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X