2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ஏறாவூரில் இன்று துக்கதினம் அனுஷ்டிப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜௌபர்கான்)

ஏறாவூர் நகரில் இன்று முழுமையான கடையடைப்பும் பூரண துக்கதினமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஏறாவூர் சதாம் குசைன் கிராமத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களின் இருபதாவது நினைவுதினத்தையொட்டியே சுஹதாக்கள் தினமாக இந்த துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

துக்கதினம் காரணமாக கடைகள்,வங்கிகள் அரச அலுவலகங்கள் உட்பட அன்றாட அலுவல்கள் அனைத்தும் ஸ்தம்பதமடைந்துள்ளன. பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இப்படுகொலைச்சம்பவங்ளில் 168முஸ்லஸம்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் 78பேர் பெண்களாவர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .