2021 மே 06, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் சர்வசே ஆசிரியர்தின விழாக்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜவ்பர்கான்)

உலக ஆசிரியர் தினவிழாக்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி ஆகிய 4 கல்வி வலயங்களிலும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ஏற்பாடுசெய்திருந்த சர்வதேச ஆசிரியர் பெரு விழா அதிபர் எஸ்.ரவீந்திரமூர்த்தி தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், இராமகிருஷ்ண மிஸன் சுவாமிகள் உட்பட பலர் அதிதிகளாகக்கலந்து கொண்டனர்.

விஷேட தேவையுள்ள சிறுவர்களால் நடாத்தப்பட்ட ஆசிரியர் தினக்கொண்டாட்டம் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. பட்டிருப்பு வலயத்தில் பல ஆசிரியர் தினக்கொண்டாட்டங்கள் இடம் பெற்றன வலய கல்வி பணிப்பாளர் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

குல்குடா வலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின வைபவங்களில் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தியும், மட்டக்களப்பு மத்திய வலய வைபவங்களில் வலய கல்வி பணிப்பபாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீனும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டார். காத்தான்குடி, ஏறாவுர், வாழைச்சேனை பகுதிகளிலும் அதிகமான ஆசிரியர் கௌரவிப்பு விழாக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .