2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மட்டக்களப்பில் தொடர் மழை; நிவாரணப் பணிகள் முன்னெடுப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும்   கடும்  மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுவதுடன், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான முதற்கட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கி வருகிறார். அரிசி, சீனி, பிஸ்கட் மற்றும் பருப்பு போன்ற பொருட்களை முதற்கட்டமாக அவர் வழங்கி வருகின்றார்.


நேற்று திங்கட்கிழமை சித்தாண்டிஇ வாழைச்சேனை, கொம்மாதுறைஇ செங்கலடிஇ வந்தாறுமூலைஇ கல்குடா, புதுக்குடியிருப்புஇ பேத்தாழை, கிண்ணையடிஇ கறுவாக்கேணி போன்ற இடங்களில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வைத்தார்.


மட்டக்களப்பிற்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தபோதிலும், படகில் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் முதலமைச்சர் ஈடுபட்டமை விசேட அம்சமாகும். நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு போக்குவரத்து தொடர்புகள் அற்ற நிலையிலுள்ள  வாழைச்சேனை நாசுவன்தீவு மக்களுக்கு சமைத்த உணவை தொடர்ந்து வழங்குவதற்கு சிவநேசத்துரை சந்திரகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .