2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான லொறி குடைசாய்ந்ததில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள சத்துருக் கொண்டான் பகுதியில் இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான லொறியொன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த லொறி குடை சாய்ந்ததில் அவ்விடத்திலுள்ள இந்து ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரே  படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன், அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்ததுடன், ஆலயத்திற்கும் சிறியளவில்  சேதமேற்பட்டுள்ளது.

இவ்விபத்தில்  படுகாயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வீதி போக்குவரத்து பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .