Super User / 2011 மே 11 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரேயொரு பௌத்த விகாரையான மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம ரஜமஹா விகாரையில் மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்துவின் சொந்த நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட மண்டபம் இன்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இம்மண்டபத்தை நிர்மாணிக்க சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக விகாராதிபதி அம்பிட்டடிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட புத்தர் சிலையும் இங்கு வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் திலக் விஜயவர்தன உட்பட படைஅதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026