Kogilavani / 2011 மே 11 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தின் வேலைகள் நிறைவடைந்த நிலையில் உள்ளமை குறித்து இப்பிரதேச மீனவச் சங்கங்களை இன்று புதன்கிழமை பிற்பகல் மீன் பிடித் துறைமுகத்தில் வைத்து கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன சந்தித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 480 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் 'தொட்டுப்பல அருன' திட்டத்தின் அடிப்படையிலும் வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டத்தின் (NECCDEP) கீழும் இத்துறைமுகம் புனரமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான என்.திரவியம், எஸ்.ஜவாஹிர் சாலி, எம்.எஸ்.இஸ்மாயில், ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேசசபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் இந்திர ரணசிங்க, கடற்றொழில் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜோர்ஜ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago