2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கைகழுவுதல் குறித்து விளக்கமளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)  
சர்வதேச கைகழுவுதல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களுக்கு கைகழுவுதல் பற்றிய விளக்கமளிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கதினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது,  கைகழுவுதல் மற்றும் சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்தும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் மாணவர்கள் மத்தியில் சங்கதின் வளவாளர்களால் எடுத்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .