Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார், எம்.சுக்ரி, ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 'பாரம்பரியத்திற்கு மகுடம் பாரம்பரிய மூலிகைக் கண்காட்சி' இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.
பாரம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.
மட்டு. இந்துக் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமான இக்கண்காட்சி செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
பாரம்பரிய கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளர் க.தங்கேஸ்வரி தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா, முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் திருகோணமலையில் சித்த போதனா வைத்தியசாலையையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் யூணானி போதனா வைத்தியசாலையையும் நிறுவவுள்ளதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க பாரம்பரிய மூலிகை கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய நாட்டின் உதவியுடன் ஆயுர்வேத மற்றும் சித்த யூணானி ஆகிய வைத்தியத்துறைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இவ்வைத்தியசாலைகள் நிறுவப்படும் எனவும் இதற்கான வேலைகள் இன்னும் ஒர்ப்ரு தினங்களில் நடைபெறும் எனவும் அவர் கூறினார். இதற்காக எமது அமைச்சு நிதியொதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்ர் சாலிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago