Super User / 2012 பெப்ரவரி 19 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
அரசாங்கத்தின் வெளிச்சம் இல்லாதோருக்கு மண்ணெண்ணைய் நிவாரண திட்டத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரன முத்திரை விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஆகியவற்றிலுள்ள பயனாளிகளுக்கான முத்திரை வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச செயலக சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஐ.இஸ்காக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மின்சார வசதியற்ற குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 200 ரூபா வீதம் முத்திரை வழங்கப்பட்டது.
.jpg)
5 minute ago
10 minute ago
38 minute ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
38 minute ago
13 May 2026