Menaka Mookandi / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆயுர்வேத மருத்துவ முறையானது இயற்கையை ஒட்டியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல கிராமங்களிலும் இயற்கையாகவே நடைமுறையில் இருந்துவந்தது.
இம்முறை இப்பொழுது உலகில் மிகவும் பிரபல்யம் அடைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இம்மருத்துவ முறைக்கு நல்ல கிராக்கியும் எற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை எமது கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்குகின்றது.
இவ் வைத்தியசாலையானது ஏனைய வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும்போதுமிகவும் குறைந்தளவு வளத்துடனும் அங்கு வேலை செய்யும் வைத்தியர்கள், பணியாளர்கள்,கிழக்கு மாகாணப் பணிப்பாளர், செயலாளா,; அமைச்சர், போன்றோர் அர்ப்பணிப்பிலும், விடாமுயற்சியினாலும் அவ்வைத்தியசாலைசிறப்பாக இயங்கிவருகின்றது.
இங்கு வருகின்ற நோயாளர்கள் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில், வாகரை தொடக்கம் திருக்கோயில் வரையும் இருந்து சிகிச்சை பெற வருகின்றார்கள். இவ்வாறு நோயாளர்கள் வரும் போது இவ் வைத்தியசாலையில் கீழ் வரும் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குறிப்பாக
(1) வைத்தியசாலையை தரமுயர்த்துதல்:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட வைத்தியசாலையாகவும், இம் மாவட்டத்தில் மிகச் சிறந்து விளங்கும் வைத்தியசாலையாக இது இருப்பதனாலும், ஆயுள் வேத வைத்தியத்தின் தேவை. மக்கள் மத்தியில் அதிகரிப்பதனாலும், இம் மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இவ்வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, விசேட சிகிச்சைப் பிரிவு, நோயாளர் விடுதி பஞ்சகர்மா சிகிச்சைப்பிரிவு, மருந்து உற்ப்பத்தி பிரிவு, மூலிகைப்பிரிவு, சமையல் பிரிவு என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.
எனவே சிறந்த ஆயுள் வேத மருத்துவ சேவையை வழங்குவதற்காக இதனை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டி உள்ளது.
(2)மருந்து கொள்வனவிற்காக நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் :-
வைத்தியசாலைக்கான மருந்துக் கொள்வனவு ஆயுள் வேத மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திலிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆரம்பத்தில் கொள்வனவு செய்ததைவிடதற்போது மருந்துகளின்விலை அதிகரித்துள்ளது.
மேலும் வெளிநோயாளர் பிரிவு, விசேட சிகிச்சைப பிரிவு, நோயாளர் விடுதி என்பனவற்றில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வைத்தியசாலையினால் ஒவ்வொரு மாதமும் நடமாடும் மருத்துவ முகாம் இடம்பெறுகின்றது. எனவே இதற்காக வழங்கப்படும் மருந்துகளுக்கான நிதி ஓதுக்கீட்டை அதிகரித்தல் அவசியமானது.
(3) ஆண், பெண் நோயாளர் விடுதிகள் :-
வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான விடுதிகள் திறந்த நிலையில் அமைக்கப்பட்டு இருப்பதனால் பாதுகாப்பற்றதாகவும்,மழை,குளிர் காலங்களில் விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் குளிரினாலும், மழைச்சாரல் விடுதியினூள் வருவதனாலும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
இதனால் மழை,குளிர் காலங்களில் நோயாளர்களை விடுதியில் தங்க வைத்து சிகிச்சை செய்வதில் பாரிய கஸ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அத்துடன் விடுதி திறந்த நிலையில் இருப்பதனால் நாய், பூனை போன்ற மிருகங்கள் உட் சென்று விடுதியை அசுத்தப்படுத்துகின்றன. எனவே தயவு கூர்ந்து ஆண், பெண் நோயாளர் விடுதிகளை மூடித்தருவதற்கு ஆவன செய்தல்.
(4) தாதிய உத்தியோகத்தர் :-
வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் இல்லாமையால் வைத்தியசாலையின் உள்ளக நோயாளர் பராமரிப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன.எனவே தாதிய உத்தியோகத்தரை நியமித்தல்.
(5)வாகன வசதி:-
வைத்திசாலையின் அவசர தேவைக்கும்,நோயளர்களை வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றுவதற்கும் வழங்கப்பட்ட வாகனத்தின் திருத்த வேலைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருதல்.
(6) வாகன தரிப்பிடம் அமைப்பதற்கான வசதி செய்து தருதல்
(7) ஆய்வுகூட வசதி :-
மர்வட்ட வைத்தியசாலையில் உள்ளநோயாளர் விடுதிகள், விசேட சிகிச்சைப் பிரிவு என்பனவற்றில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான சிறுநீர், இரத்தப் பரிசோதனை, நுஊபு போன்றவற்றை செய்வதற்கு வசதியாக ஆய்வுகூட வசதியை ஏற்ப்படுத்துதல், இதற்கான உத்தியோகத்தர்களை வழங்குதல்.
(8) வைத்தியசாலைக்கு கிடைக்கப் பெறும் மருந்து வகைகள் களஞ்சியப்படுத்துவதற்கு ஒன்று அமைத்தல்.
(9)வைத்தியசாலை மூலிகை தோட்ட பிரிவில் அரிதான மூலிகைகளை பாதுகாப்பதற்கு பச்சை வீடு அமைத்தல்.
அரிதான மூலிகைகளை பாதுகாப்பதற்காகவும் மூலிகைத் தோட்டத்தை பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு எளிதாக அடையாளம் காணும்வண்ணம் ஒழுங்குபடுத்துவதற்காகவும் பச்சை வீடு ஒன்றைஅமைத்தல்.
(10) வைத்தியசாலையிலேயே மருந்து தயாரிப்பதற்கு கட்டிடவசதிகள் ஏற்ப்படுத்துதல்:-
வைத்தியசாலையில் இயங்கிவரும் மருந்து உற்பத்தி பிரிவு தற்காலிக கட்டித்தில் இயங்கி வருகின்றது.
இதனால் மருந்து தயாரிப்பதற்கான அடிப்படை வசதிகள் குறைவாகக் காணப்படுவதனாலும் உரிய கட்டடத்தை அமைத்தல்
(11) வைத்தியசாலையில் இயங்கி வரும் பஞ்சகர்மாப்பிரிவு மருத்துவ பொறுப்பதிகாரி விடுதியில் இயங்கி வருகின்றது. இங்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் குறைவாகப் காணப்படுகின்றது எனவே இதற்கான கட்டிடத்தை அமைத்தல்.
(12) மின்சாரம் இல்லாத வேளைகளில் மின்சாரத்தை பெறுவதற்கு புநநெசயவழசஅவசியமான உபகரணங்கள், தளபடங்கள்.
(13) விடுதிகளில் மலசலகூட வசதிகள் ஒழுங்காக காணப்படவில்லை. இதைத்திருத்தி அமைப்பதோடு மேலதிகமாக மலசலகூடவசதிகள் அமைக்கப்படவேண்டும். ஏனைய இடங்களில் உள்ள வைதியசாலைகள் தொடர்பாக
(14) கல்லடி, வாகரை, போரதீவு கிராமவைத்தியசாலையாக தரம் உயர்துதல்
(15) சத்துருக்கொண்டான், மண்டுர், தேத்தாதீவு, கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை ஆகியவைத்தியசாலைகள் தனியார் கட்டடிடங்களில் இயங்கிவருகின்றன இதற்கான அரசகாணியை பெற்று புதியகட்டிடங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படவேண்டும்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும், ஏனையவையிலும் இவ்வளவு குறைபாடுகள் இருந்தும், மிகவும் சிறப்பாக இவ்வைத்தியசாலைகள் செயல்பட்டுவருகின்றன.
இருந்தும் இம்மாவட்ட வைத்தியசாலையின் முன்னேற்றம் தொடர்பாக எமது கிழக்கு மாகாணசபை வருடா வருடம் முன்நேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு மிகவும் வெட்கமும், மனவேதனையும் அடைகின்றேன்.
காரணம் இது எனது இரண்டாவது கடிதமாகும் தொடர்ந்தும் இது திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்படுகின்றனவா? தற்சமயம் புதியபணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். தொடந்தும் இவ்வைத்தியசாலைகள் சிறப்பாக செயல்பட இங்குள்ளதேவைகளை நிறைவேற்ற பாராமுகமாக இருக்கவேண்டாம், என இதுதொடர்பான அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் மிகவிரைவாக தங்கள் பதிலையும் எதிர்பாக்கின்றேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
34 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago