Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
சிவில் சமூகத்தின் முழுமையான பங்களிப்புடன் அனர்த்தங்களின்போது தாக்குப்பிடிக்கக்கூடிய பாதுகாப்பான நகரங்களை உருவாக்குவதற்கான உள்ளூராட்சி நிறுவனத் தலைவர்களின் செயற்றிட்டத்திற்கு வழிகாட்டியான பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு, மைலம்பாவெளி சமாரிட்டன் அரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நகர அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி நிறுவனங்களின் சம்மேளனம், இலங்கை உள்ளூராட்சி நிறுவனம், ஆசிய இடர் ஆயத்த நிலையம், பிரக்டிகல் அக்சன் ஆகியவற்றின் அனுசரணையுடன் இச்செயலமர்வு நடைபெற்றது.
இடர்முகாமைத்துவ இடர் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் அனோஜா செனவிரத்ன உட்பட பல வளவாளர்கள் இப்பயிற்சிச் செயலமர்வை நடத்தினர். இதில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சத்தியானந்தி, ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலி சாகீர் மௌலான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
30 minute ago
51 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
57 minute ago
1 hours ago