Kogilavani / 2012 மார்ச் 02 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை மோட்டார் குண்டு ஒன்றை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கிக்கு பின்னாலுள்ள வளவு ஒன்றில் இந்த மோட்;டார் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வளவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இந்த குண்டை கண்டுள்ளதுடன் பொதுமக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குண்டு செயலிக்கும் பிரிவினரின் உதவியுடன் குண்டை செயலிக்கச் செய்துள்ளனர்.
'அருன் 81' ரக மோட்டார் குண்டே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago