2026 மே 09, சனிக்கிழமை

dd

மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு டீசல் மானிய கூப்பன் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 03 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

 

 

வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு டீசல் மானிய கூப்பன் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை அல் - அமான் ஆழ்கடல் படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.யூ.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, 300  பல நாள் படகுகளுக்கும்  40 ஒரு நாள் படகுகளுக்கும், 35 வெளியினை இயந்திரம் பூட்டப்பட்ட  படகுகளுக்கும் மானியக் கூப்பன்கள் வழங்கி வைக்கப்பட்டன.

300 பல நாட் படகுகளுக்கு ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம் ரூபாவும் 40 ஒரு நாள் படகுக்கு ஒரு மாதத்திற்கு பதினெட்டாயிரம் ரூபாவும் 35 வெளியினை இயந்திரம் பூட்டப்பட்ட படகுகளுக்கு 6250 ரூபா வீதமும் கூப்பன்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள பிரதிப் பணிப்பாளர் ரீ.ஜோர்ஜ், மாவட்ட மீன்பிடிப் பரிசோதகர்களான எஸ்.கணேசமூர்த்தி, ஜே.ராஜ்குமார், எஸ்.எம்.இம்தியாஸ், மீனவர் சங்க பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .