Suganthini Ratnam / 2012 மார்ச் 21 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஆளுமை, திறன்களை விருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் பயிற்சிகளை முடித்துக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவமளிப்பும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜேர்மனின் ஏ.எஸ்.பி. நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஒன்டரை வருடகாலச் செயற்றிட்டத்தில் களுவாஞ்சிக்குடி, கிரான், பட்டிப்பளை, கோரளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சுமார் 100 உத்தியோகத்தர்கள் பங்குகொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் ஜேர்மனின் ஏ.எஸ்.பி நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோ, திட்ட இணைப்பாளர், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சுதாகர், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிகாரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago