2026 மே 05, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 02 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                               (எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து புறப்பட்ட வான் இன்று சனிக்கிழமை அதிகாலை  விபத்திற்குள்ளானதில் அவ்வானில் பயணித்த இருவரும்; சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

தம்புள்ளை பிரதான வீதியில் குறித்த வான் லொறியொன்றுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்தது.

காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான வானின் சாரதி எம்.ஏ.லத்தீப், எம்.நிப்றாஸ் ஆகியோரே பலியானதாக காத்தான்குடி வான் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.சம்சுதீன் தெரிவித்தார்.

இவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .