2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஆசியா பவுண்டேஷனின் சிறுகைத்தொழில் அபிவிருத்தி நிதி கடன் திட்டம் கைச்சாத்திடல்

A.P.Mathan   / 2012 ஜூன் 02 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ரி.லோஹித்)


ஆசியா மன்றத்தின் (ஆசியா பவுண்டேஷன்) உள்ளூர் பொருளாதார ஆளுகைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி நிதி எனப்படும் கடன் திட்டம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு பாடும்மீன்  ஹோட்டலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் விவசாய வர்த்தக சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் ஆசியா மன்றத்துடன் செய்து கெண்டன.

இந்நிகழ்வில் இரண்டு சம்மேளனங்களின் தலைவர்களான ரஞ்சிதமூர்த்தி, செல்வராஜா,  செயலாளர்கள், இயக்குநர்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். விசேட அதிதியாக முன்னாள் அமைச்சரும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எம்.அமீர்அலி கலந்து கொண்டார்.

அத்துடன் ஆசியா மன்றத்தின் உள்ளூர் பொருளாதார ஆளுகைத்திட்டத்தின் பணிப்பாளர் தினேசா டி சில்வா, சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சூலா ஜயசூரிய, திட்ட அலுவலர் சசிகரன் ஆகியோரும் ஹட்டன் நஷனல் வங்கியின் தாண்டவன்வெளி கிளை முகாமையாளர் றொசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் படி இரண்டு சம்மேளனங்களுக்கும் தலா 5 இலட்சம் வீதம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு அதிலிருந்து சிறு கைத்தொழிலாளர்களுக்கு இலகு வட்டி வீத அடிப்படையில் 50 ஆயிரம் முதல் 2 இலட்சத்து 50 ஆயிரம் வரை கடன்கள் வழங்கப்படும்.

மூன்று வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் நிறைவு பெற்றதும் வர்த்தக சம்மேளனங்கள் தனியாக இந்த கடன் நடைமுறைகளை கொண்டு செயற்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .