2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

திறந்த பல்கலையின் சான்றிதழ் வழங்கும் விழா முதற் தடவையாக மட்டக்களப்பில்

Super User   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், ரி.லோஹித்)

திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா முதற் தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிலுள்ள பல்கலைக்கழகத்தில் பிராந்திய கற்றை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்று வந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் முதற் தடவையாக இம்முறை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 350 பேர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

கிழக்கு  பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி கே.கோபிந்தராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் டபிள்யூ.ஏ. விமலவீர கொளரவ அதிதியாக கலந்துகொண்டனர்.

முகாமைத்துவம், தொழில்நுட்பம், ஆரம்ப கல்வி, தொழில்சார் ஆங்கிலம், சமூகவியல் உள்ளிட்ட கற்கைநெறிகளுக்கான சான்றிதழ்களே வழங்க்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .