2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கடமையை பொறுப்பேற்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்  மா அதிபர் செனவிரட்ன, மாவட்ட பொலிஸ்; அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்; நிலையங்களின் பொறுப்பதிகாரிகள,; மதப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இவர் தனது கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னராக பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடன் பூஜித ஜயசுந்தர தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .