2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

நெல்லூரில் கைக்குண்டுகள் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 14 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் எனும் கிராமத்தில் 3 கையெறி குண்டுகளை ஆயித்தியமலைப் பொலிஸார் நேற்று புதன் மாலை கைப்பற்றியுள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் குண்டுகளை அந்தப்பகுதித் தோட்டத்திலுள்ள பெண்ணொருவர் கண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததின் பேரிலேயே தாங்கள் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று இந்தக் குண்டுகளை மீட்டதாக ஆயித்தியமலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.

புலிகள் இந்தப் பகுதிகளை விட்டுப் பின்வாங்கிச் செல்லும்போது கைவிட்டுச் சென்ற குண்டுகளாக இவை இருக்கலாம் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .