2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


போரினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு பிரதேச வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வவுணதீவுப் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

நியூஸிலாந்து சிறுவர் நிதியத்தினூடாக, இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிமனையினால் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக நீர்சுத்தகிரப்பு கொள்கலன்; உள்ளிட்ட பொருட்களும் வறிய மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அன்பளிப்பு பொருட்களை  வழங்கி வைத்ததுடன்  சிறுவர் நிதியத்தின் பிராந்திய முகாமையாளர் வேர்னாட் பிரகாஸ், வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எல்.ஆர்.டிலிமா மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .