2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

மட்டு.மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கணினிகள், பிரின்டர் இயந்திரங்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு மட்டக்களப்பு வர்த்தகர் சங்க தலைவர் கே.அமிர்தலிங்கம் கணினிகள் மற்றும் பிரின்டர் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு மேற்படி இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இவற்றினை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன உட்பட பல பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .