2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட விரிவாக்கல் வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட விரிவாக்கல் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. விளையாட்டுத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது மட்டக்களப்பு மற்றும் கல்குடா தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலைங்கள் ரீதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கிளைகளை புனரமைத்து கட்சிக்குழுக்களை அமைக்கும் நடைவடிக்கைகள் இடம்பெற்றன.

இந்த விரிவாக்கல் வேலைத்திட்டத்தில் அமைச்சர்களான சரத் அமுனுகம, சி.வி.ரத்னாயக்கா, ஏ.எச்.எம்.பௌஷி, மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டதோடு கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களின் குறைகள், தேவைகள் என்பவற்றை கேட்டு வருகின்றனர்.

இதன் போது கட்சியில் புதிதாக இணைவோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .