2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

என்னை பற்றிய அமைச்சர் பௌஸியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: ஹிஸ்புல்லா

Super User   / 2012 ஜூன் 18 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சிரேஷ்ட அமைச்சர் பௌஸி என்னை பற்றி கூறியிருப்பதானது அப்பட்டமான பொய்யாகும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏஎ.ம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலுள்ள செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா,

"சிரேஷ்ட அமைச்சர் பௌசி காத்தான்குடியில் வைத்து என்னை பற்றி தெரிவித்த கருத்தக்கள் தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன். அமைச்சர் பௌஸி என் மீது சுமத்தியிருந்த மூன்று குற்றச்சாட்டு;க்களை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். காத்தான்குடியிலுள்ள வீதி ஒன்றுக்கு அமைச்சர் பௌஸியின் பெயர் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதை நான் எடுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

காத்தான்குடியிலுள்ள வீதிகளுக்கு பெயர் சூட்டுவது அதை எடுப்பது காத்தான்குடி நகர சபையின் வேலையாகும். குறிப்பிட்ட இந்த வீதி கடந்த 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் டெலிகொம் வீதி என அழைக்கப்பட்டது. அதற்கு பிறகு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவுக்கு பிறகு காத்தான்குடி நகர சபை மக்களின் பூரண ஆதரவுடனும் அரசியல் பிரமுகர்களின் ஆலோசனையுடனும் குறித்த வீதிக்கு அஷ்ஷஹீத் அஷ்ரப் வீதி என பெயரை மாற்றினர்.

கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி குறித்த வீதி டாக்டர் அஷ்ரப் மாவத்தை என வர்த்தமானி அறிவித்தல் மூலம் காத்தான்குடி நகர சபை பிரகடனப்படுத்தியது. 2001ஆம் ஆண்டு ஒரு வெள்ளிக்கிழமை திடீரென யாருக்கும் தெரியாமல் அன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இருந்த மர்சூக் அகமட்லெவ்வை அஷ்ரப் மாவத்தை என இருந்த குறித்த வீதிக்கான  பெயர் பலகையை அகற்றி விட்டு பௌசி மாவத்தை எனும் பெயர் பலகை சிறியதொரு மட்டைத்தாளில் எழுதி போட்டிருந்தார்.

அதை அந்த நேரம் கழற்றி ஒரு பிரச்சினையாக ஆக்கவதற்கு நாங்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் அன்மையில் நாங்கள் காத்தான்குடியிலுள்ள வீதிகளுக்கு பெயர் பலகை இட்ட போது, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதிற்கு இணங்க குறித்த வீதிக்கு டாக்டர் அஷ்ரப் மாவத்தை எனும் நிரந்தர பெயர் பலகையை நட்டினோம்.

கொழும்பிலிருந்து வந்து சேவை செய்த பலரின் பெயர்களை காத்தான்குடியில் வீதிகளுக்கு நாங்கள்  பெயர் சூட்டியுள்ளோம். அந்த வகையில் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை, சேர் றாசீக் பரீத் மாவத்தை என்றெல்லாம் பெயர் வைத்துள்ளோம். அமைச்சர் பௌஸியின் பெயரும் ஏதாவது ஒரு வீதிக்கு சூட்ட வேண்டும் என்பதற்காக காத்தான்குடி முதியோர் இல்ல வீதிக்கு பெயரை வைப்போம் என நினைத்தோம்.

ஆனால் அது கிறவல் வீதி அதற்கு அவரின் பெயரை வைத்தால் அதிலும் விமர்சனம் ஏற்படும் என்பதற்காக இரண்டரை கோடி ரூபா செலவில்  நிதியொதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வாரம் தான் குறித்த வீதியின் புனரமைப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன. அந்த வீதிக்கு அமைச்சர் பௌஸியின் பெயரை சூட்ட வேண்டும் என்று இருக்கின்றோம். அமைச்சர் பௌஸியை நான் என்றும் மதிப்பவன். அந்த வகையில் குறித்த வீதிக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என ஆலோசனை செய்துள்ளளோம்.

எந்த சூழ்நிலையிலும் அமைச்சர் பௌஸியின் பெயரை மாற்றவில்லை. வர்த்தமாணி அறிவித்தலின் பிரகாரமே குறித்த வீதிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பௌஸி மாவத்தை ஒன்று என்பது காத்தான்குடியில் இல்லை. அஷ்ரப் மாவத்தை என்பதை பலாத்காரமாக பௌஸி மாவத்தை என பெயர் வைக்கப்பட்டதை காத்தான்குடி நகரசபையோ ஊர் மக்களோ அனுமதிக்க முடியாது.

குறித்த வீதிக்கு மறைந்த தலைவர் அஷ்ரபின் பெயரை தான் நாங்கள்  வைத்தள்ளோம். அமைச்சர் பௌஸியின் பெயரை எடுத்து விட்டுத்தான் நாங்கள் அஷ்ரபின் பெயரை வைத்தள்ளோம் என்பது முழுக்க முழுக்க தவறானதும் முஸ்லிம்கள் மத்தியல் காத்தான்குடியின் மீது தப்பபிப்பராயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

இது ஒரு கவலையான விடயமுமாகும். பௌஸி மாவத்தை என்று யாரும் பெயர் வைக்கவுமில்லை யாரும் அதை அங்கீகரிக்கவுமில்லை. இது தொடர்பில் நகர சபையில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட பெயர் தான் டாக்டர் அஷ்ரப் மாவத்தையாகும்.  அதையே அவ்வீதிக்கு வைத்தள்ளோம். அமைச்சர் பௌஸி கூறியுள்ள அடுத்த விடயம் தோணாக்கால்வாய் தோன்டுவதற்கு எனக்கு ஒன்பது இலட்சம் ரூபா தந்ததாக கூறியுள்ளார்.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த போது அவரை அழைத்து வந்து தோணா கால்வாயை காட்டினேன். நான் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் என்ற வகையில் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அவரிடம் காட்டினேன்.

குறித்த கால்வாயை தோண்டுவதற்காக காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு 5 இலட்சம் ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்திருந்தார். மாறாக அவர் என்னிடம் பணம் தரவில்லை. பிரதேச செயலகத்திற்கே குறித்த நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.  அவர் கூறியிருப்பது போல அது 9 இலட்சமல்ல 5 இலட்சம் ருபாவை காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கீடு செய்திருந்தார்.

அவர் கூறியுள்ள அடுத்த விடயம் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்தவுடன் நான் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் சென்று கூறியதாகவும் அமைச்சர் பௌஸி தான் இதை கேட்டுள்ளார் என்று கூறியதும் ஒரு அப்பட்டமான பொய்யாகும்.
எனக்கு முதலமைச்சர் பதிவியை தருமாறு நான் கேட்டு நின்றேன். இதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பஷில் ராஜபகஷ ஆகியோரிடமும் விவாதித்தேன்.

முதலமைச்சர் பதவி பிரமானம் செய்யும் போது கூட நான் செல்லவில்லை. இந்நிலையில் ஒரு போதும் நான் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் முதலமைச்சர் பதவியை கோரி நின்றது உலகத்துக்கே தெரியும் இந்நிலையில் யாரும் இதை ஏற்றக்கொள்ளமாட்டார்கள் இதுவும் அமைச்சர் பௌஸியின் தவறான கூற்றாகும் என்பதை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இவ்வாறான கருத்துக்களை அமைச்சர் பௌஸி கூறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். ஓட்டாவடியில் வைத்து முன்பு இவ்வாறான ஒரு கருத்தை அமைச்சர் பௌஸி கூறியிருந்தார். அதன் பின்பு நான் நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்து அவரிடம் விடயத்தை விளக்கி கூறியும் அவர் தப்பாகவே பேசுகின்றார். அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுப்பதுடன் எதிர்காலத்தில் அதை அவர் திருத்திக்கொள்ள வேண்டும் என கூறிக்கொள்கின்றேன்'  என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெசீம் மற்றும் நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி:

நான் செய்த உதவிகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறந்துவிட்டார்: பௌசி



  Comments - 0

  • pottuvilan Monday, 18 June 2012 01:37 PM

    இல்லா விட்டால் நீங்கள் பெரும் உண்மைவாதிதான். நீங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு செய்த துரோகங்களும் மீறிய வாக்குறுதிகளும் மக்களுக்கு நன்றாக தெரியும்.

    Reply : 0       0

    nallavan Monday, 18 June 2012 06:17 PM

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....... அர்சியலில் இதெல்லாம் சகஜமே.................. நகர சஃபையோ, வீதி அபிவிருத்தி அதிகார சபையோ எதுவென்டாலும் ஹிஸ்புல்லஹ் அமைச்சருக்கு தெரியாம அவர்ட அனுமதி இல்லாம காத்தான்குடியில ஏதாவது நடந்திடுமோ, இதை நாங்க நம்பனுமோ.............. என்ன கொடுமை இது................................

    Reply : 0       0

    saki Tuesday, 19 June 2012 05:22 AM

    சமூகத்திலே தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கு. அதை விட்டுவிட்டு இதுதான் இப்ப ரொம்ப முக்கியமோ?

    Reply : 0       0

    Mohammed Hiraz Tuesday, 19 June 2012 06:42 AM

    பொத்துவிலான் நீங்க பொத்துவிலில இருந்தா உலகம் விளங்கிற கஷ்டந்தான். ஆமா ஹிஸ்புல்லாஹ் வாக்களித்த எந்த மக்களுக்கு துரோகம் செய்தார்??? அவருக்கு வாக்களித்த மக்கள் கேட்டு கொண்டதாலதான் அவர் முஸ்லிம் காங்கிரசவிட்டு வெளியேறினார்!!! அவரது முடிவு எப்பவும் தனி மனிதரின் முடிவாக இருப்பதே கிடையாது. அவர் வாக்களித்த மக்களிடம் ஆலோசனை செய்துவிட்டே அரசியல் முடிவை எடுப்பார். எனவே ஒருத்தர் மேல் குற்றம் சாட்டுகையில் ஆதாரத்துடன் குற்றம் சாட்ட பழகுங்கள்!!! முஸ்லிம் காங்கிரஸ்தான் 2000 ஆண்டு ஹிஸ்புல்லாஹ் தோற்க வேண்டும் என்பதற்காக நுஆ என்ற கட்சியில் மட்ட்களப்பில் மட்டும் போட்டி இட்டு ஏனைய இடங்களில் எல்லாம் ஆளும் கட்சியுடன் சேர்ந்து போட்டி இட்டு ஹிஸ்புல்லாஹ்வின் அரசியலை ஒழித்து கட்ட சதி செய்தது.

    Reply : 0       0

    thagha Tuesday, 19 June 2012 07:51 AM

    அமைச்சரே.... நீங்கள் நாட்டியுள்ள பேரீத்தம் மரங்களில் ஒன்றுக்கு அமைச்சர் Fauzi மரம் என்று பெயர் சூட்டுங்கள்.
    அப்படியே அமைச்சர் அதாவுல்லா மரம்,
    அமைச்சர் ரிசாத் பதியுதீன் மரம் என்றும் பெயர் வையுங்கள்....

    Reply : 0       0

    Muthabi3 Tuesday, 19 June 2012 08:07 AM

    தம்பி ஹிராஸ் , நீங்கள் இன்னுமா விமர்சனம் செய்கிறீர்கள்? உங்களுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவு குறைவு.

    Reply : 0       0

    Mohammed Hiraz Tuesday, 19 June 2012 09:55 AM

    என்னங்க நீங்க முன்ன பின்ன தெரியாதவங்கள உறவு முறை வச்சி அழைத்து ஏன் உங்க பெற்றோரை இழிவு படுதுகிறீங்க. உங்க பெற்றோர் எனக்கு பெற்றோராகாத விடத்து நான் எப்படி உங்களுக்கு தம்பியாவேன் உறவு எப்படி வரும் என்றே தெளிவில்லாத நீங்க 32 வருஷம் ஹிஸ்புல்லாஹ்வின் ஒவ்வொரு நடத்தையை அறியும் எங்களுக்கே போதிக்க போறிகளா??? போதிக்குமுன்னர் உலக நடை முறைகளை அறிந்து தெரிந்து உறவு கொண்டாடுங்கள்.

    Reply : 0       0

    pottuvilan Tuesday, 19 June 2012 11:15 AM

    சகோ.ஹிராஸ்,உங்களுக்கு ஹிஸ்புல்லாவின் அரசியல் தடம் பற்றிய சரித்திரம் தெரியாது என நினைக்கிறேன். முடியுமானால் வாருங்கள் பகிரங்கமாக விவாதிப்போம்.

    Reply : 0       0

    jhams Wednesday, 20 June 2012 10:08 AM

    சகோ. மிஸ்டர் ஹிராஸ், ஹிஸ்புல்லாவின் பாசறையில் வளர்ந்தவரரச்சே. அதனால் இப்படிதான் பேசுவார். கவலைபட வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .